/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குளிர்காலத்தில் முதியவர்கள் தோலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்'
/
'குளிர்காலத்தில் முதியவர்கள் தோலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்'
'குளிர்காலத்தில் முதியவர்கள் தோலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்'
'குளிர்காலத்தில் முதியவர்கள் தோலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்'
ADDED : டிச 21, 2024 11:23 PM

குளிர் காலத்தில் வயது முதிர்ந்தவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால், தோல் அரிப்பு, அழற்சி ஆகியவற்றில் இருந்து தப்பலாம் என, கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறினார்.
அவர் கூறியதாவது:
முதுமையில், பல்வேறு வழிகளில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. வயதாகும் போது, தோல் மெல்லியதாகவும், வறண்டதாகவும், குறைந்த மீள் தன்மையுடனும் மாறும். சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முதுமையின் பிற அறிகுறிகள் ஏற்படும்.
இதனால், தோல் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறது. குளிர்ந்த காலநிலை, மற்றும் குளிர் காற்று ஆகியவற்றால் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் நீங்கி, தோல் மேலும், சுருங்கி, அரிப்பை ஏற்படுத்துகிறது.
வறண்ட சருமம்
குளிர்கால மாதங்களில் இது ஒரு பொதுவான பிரச்னை. தோல் குளிர்ந்த வெப்பநிலைக்கு வெளிப்படும். வறண்ட காற்று தோலில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி, உலர வைக்கிறது.
தோலின் மிக மென்மையான பகுதிகளில் ஒன்று உதடுகள். குளிர்காலத்தில் வறட்சி, வெடிப்பு, விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், வலி மற்றும் அசவுகரியம் ஏற்படும்.
தோல் பிரச்னைகளைத் தடுக்க, வயதானவர்கள் தங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற தோல் பிரச்னைகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. சுயமருத்துவம் கூடாது.
குளிர் காலநிலையிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க, வயதானவர்கள் கையுறைகள், தொப்பிகள், மற்றும் ஜாக்கெட்டுகள் போன்ற பாதுகாப்பு ஆடைகளை அணியலாம். கம்பளி அல்லது பருத்தி போன்ற இயற்கை இழைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். விட்டமின்களை போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.