/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடைபாதையில் கார் மோதி மூதாட்டி மரணம்
/
நடைபாதையில் கார் மோதி மூதாட்டி மரணம்
ADDED : மே 05, 2025 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; நேற்று முன்தினம் இரவு, அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பஸ் ஸ்டாண்ட் பகுதியில், 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி படுத்திருந்தார்.
இரவு 11:00 மணியளவில் அவ்வழியாக வந்த கார், திடீரென மூதாட்டியின் கால்கள் மீது ஏறியது. இதில் அப்பெண்ணின் இரண்டு கால்களும் சேதமடைந்தன.
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கார் டிரைவர் குனியமுத்தூர் கரும்புக்கடை பூங்கா நகரை சேர்ந்த சிக்கந்தர்பாஷா, 44 மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.