/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவுக்கு வைத்த தீ பற்றி மூதாட்டி பலி
/
கழிவுக்கு வைத்த தீ பற்றி மூதாட்டி பலி
ADDED : டிச 28, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் கோவை, பி.கே. புதூர், பத்ரகாளியம்மன் வீதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது தாய் லட்சுமி தேவி, 90, நரசிம்மபுரம், ஐயப்பன் நகரில் வசித்து வந்தார். கடந்த, 25- ல் வேணுகோபால் தனது தாயாரின் வீட்டிலிருந்தார். அப்போது லட்சுமி தேவி வீட்டின் முன் வெளியே குப்பை கழிவிற்கு தீ வைத்தார். எதிர்பாராவிதமாக, தீ அவரது சேலையில் பற்றியதால், சத்தமிட்டார்.
வேணுகோபால் வெளியே வந்து தீயை அணைத்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூதாட்டி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

