/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் சக்கரம் ஏறியதால் மூதாட்டி படுகாயம்
/
பஸ் சக்கரம் ஏறியதால் மூதாட்டி படுகாயம்
ADDED : நவ 25, 2024 10:36 PM
கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் பஸ் ஏற முயன்ற மூதாட்டி, தவறி கீழே விழுந்த போது, பஸ் சக்கரம் அவர் மீது ஏறியதில், படுகாயமடைந்தார்.
கிணத்துக்கடவு, வடசித்தூர், சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி, 69. இவர், நேற்று காலை கிணத்துக்கடவு செல்ல கொண்டபட்டி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அரசு பஸ் வந்தவுடன், பஸ்சில் ஏறிய பாப்பாத்தி, தவறி கீழே விழுந்தார்.
இதில், பஸ்சின் பின் சக்கரம் பாப்பாத்தியின் கால் மீது ஏறியது. இதில், அவரது வலது காலில் படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பஸ்சை ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த டிரைவர் ஜெயபாண்டி, 35, மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.