ADDED : ஏப் 15, 2026 06:53 PM

அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுாரில், தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பதட்டமான ஓட்டு சாவடிகள் அடையாளம் காணப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அச்சம் இல்லாமல் ஓட்டுப்பதிவு செய்யலாம் என்பதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடந்தது.
மகாராஷ்டிராவை சேர்ந்த 40 போலீசார் மற்றும் எஸ்.ஐ.,கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். அன்னுார் போலீஸ் ஸ்டேஷன் முன் அணிவகுப்பு ஊர்வலம் துவங்கி, கோவை சாலை, பிரதான சாலை, சத்தி சாலை வழியாக ஒரு கி.மீ., துாரம் நடந்தது.
