/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு
/
பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு
ADDED : டிச 06, 2024 11:16 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, வாகீஸ்வரி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில், மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பொள்ளாச்சி அருகே, வாகீஸ்வரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளியில் இயங்கி வரும் குழந்தைகள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாணவர்கள் மற்றும் உயர் வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மகாராஷ்டிரா மாநில பிரதிநிதியாக பொறுப்பு வகிக்கும் மாணவர் சத்தியமூர்த்தி, ஜனநாயகத்தில் தேர்தல் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
ராஜஸ்தான் மாநில பிரதிநிதி பொறுப்பு வகிக்கும் மாணவர் ஸ்ரீவிகாஷினி, குழந்தைகள் பாராளுமன்றத்தின் சபாநாயகர் பொறுப்பு வகிக்கும் மாணவர் மதுரிதா, மாணவர் சம்பத்குமார் பேசினர். ஆனைமலை துணை தாசில்தார் செந்தில்குமார்,தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வருவாய் துறை அதிகாரிகள் முருகன், விஜய் அமிர்தராஜ் பேசினர்.