ADDED : மார் 28, 2026 05:01 PM

அ நிறம் | அளவு
கோவை: அண்ணா பல்கலை, ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ஏழு நாள் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
முகாமின் மூன்றாவது நாளான நேற்று மாவட்ட தேர்தல் பிரிவுடன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மதுக்கரையில் நடந்த இப் பேரணியில், கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தேர்தல் குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து, ஜனநாயக கடமையான வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
முன்னதாக, கல்லூரி முதல்வர் மனோகரன் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் மதுக்கரை நகராட்சி ஆணையர் சத்யா, சிறப்பு தேர்தல் அதிகாரி முருகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
