/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் தேதி அறிவிப்பு குறைதீர் நாள் முகாம் ரத்து
/
தேர்தல் தேதி அறிவிப்பு குறைதீர் நாள் முகாம் ரத்து
ADDED : மார் 17, 2024 11:52 PM
பொள்ளாச்சி:தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், சப்-கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் நடக்கும் குறை தீர் நாள் முகாம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், வாரம்தோறும் திங்கள் கிழமைகளில், குறை தீர் நாள் முகாம் நடைபெறும். இந்த முகாமில், நகரம் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களும் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா போன்றவைக்காக கோரிக்கை மனுக்களும்; ஆக்கிரமிப்பு அகற்றுதல்,ரோடு சரி செய்தல் போன்ற பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தியும் மனுக்களை அளித்து வருகின்றனர். இதனால், திங்கள் கிழமையில், மக்கள் அதிகமாக வருவதால், கூட்டமும் அதிகமாக காணப்படும். இதன் வாயிலாக, அவர்களின் கோரிக்கைளுக்கு தீர்வு காணப்பட்டு வந்தது.
தற்போது, லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதால், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, தற்போது குறை தீர் முகாம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா வெளியிட்டுள்ள அறிக்கை: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், குறை தீர் நாள் முகாம் இன்று முதல் (18ம் தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறை முடியும் வரை நடைபெறாது எனவும், சப் - கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர்க்கும் பெட்டியில் மனுக்களை அளிக்கலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

