ஓட்டுசாவடிகளில் அடிப்படை வசதிகள்: தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு
ஓட்டுசாவடிகளில் அடிப்படை வசதிகள்: தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஏப் 20, 2026 08:43 PM
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட ஓட்டு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஏப்., 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் நடந்து வருகின்றன.
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடி மையங்களில் வாக்காளர்கள் ஓட்டளிக்க வரும்போது, வரிசையில் நிற்க போதுமான இட வசதி குறித்தும், வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா? மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்பதிவு செய்ய ஏதுவாக சாய்வு தளங்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர், அவர்களை அழைத்துச் செல்ல தன்னார்வலர்கள் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் தயாராக உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு நடத்தினர். மாற்றுத்திறனாளிகள் பொது வரிசையில் காத்திருக்காமல், நேரடியாக உள்ளே செல்ல உரிமை உண்டு எனவும் அறிவுறுத்தினர்.
மேலும், போதிய அளவிலான மின்விளக்குகள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
