ADDED : மார் 31, 2026 07:48 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப். 23ல் நடக்கிறது. தேர்தலில், ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 40 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவிட வேண்டும் என்பது விதிமுறை.
வேட்பு மனு தாக்கலின்போதே, வேட்பாளர்களுக்கு செலவு கணக்கு பதிவு செய்வதற்காக புத்தகம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வேட்பாளரும், ஓட்டுப்பதிவுக்கு முன் இரண்டு முறை; ஓட்டுப்பதிவுக்கு பின் ஒருமுறை என, மூன்று முறை, செலவு கணக்கு தாக்கல் செய்யவேண்டும்.
'வேட்பு மனு தாக்கல் செய்த நாள் முதலே, வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கு தயாரிக்கப்பட வேண்டும். துல்லியமாக செலவு கணக்குகளை எழுதி, பதிவுகளை பராமரிக்கவேண்டும்,' என தேர்தல் பார்வையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
