ADDED : மார் 18, 2026 04:33 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிக்களுக்கான தேர்தல் பொது பார்வையாளர் சுனில் யாதவ், நேற்று கோவை வந்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 23ல் நடக்க உள்ளது. இதற்கான மனு தாக்கல், 30ம் தேதி துவங்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு 136 பார்வையாளர்கள், 40 காவல்துறை பார்வையாளர்கள், 152 செலவினப் பார்வையாளர்களை, தேர்தல் கமிஷன் நியமனம் செய்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுனில் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று இரவு, டில்லியில் இருந்து விமானத்தில் கோவை வந்தடைந்தார்.
