தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ; 32 பேர் கைது 

 தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ; 32 பேர் கைது 

 தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ; 32 பேர் கைது 


ADDED : மார் 18, 2026 08:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 08:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: புறநகர் பகுதிகளில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 32 ரவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை புறநகர் பகுதிகளில் தேர்தல் செயல்பாடுகளில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாத வகையில், போலீசாரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, இதற்கு முன் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், குற்றவாளிகள் பதிவுகளில் உள்ளவர்கள் தற்போது என்ன செய்கின்றனர் என்பதை, கடந்த சில நாட்களாக போலீசார் கண்காணித்தனர்.

சிறப்பு வாகன சோதனை, இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில், தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 32 பேர், எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டனர். மேலும் சில குற்றவாளிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us