தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை: 594 ரவுடிகளிடம் பிணை பத்திரம்
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை: 594 ரவுடிகளிடம் பிணை பத்திரம்
ADDED : ஏப் 05, 2026 11:02 PM
அ நிறம் | அளவு
கோவை: தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையாக, கோவையில் 594 ரவுடிகளிடம் பிணை உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது.
குற்றங்களின் அடிப்படையில் ரவுடிகள் 'ஏ பிளஸ்', 'ஏ', 'பி', 'சி', என நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் பட்டியல் தொகுக்கப்பட்டு முழுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் கூறுகையில், ' பழங்குற்றவாளிகள், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளனர். 594 ரவுடிகளிடம் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க, நல்லொழுக்க பிணை பத்திர உறுதிமொழி பெறப்படுகிறது. உறுதிமொழி பத்திரம் பெற்ற பின்னும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டால், பிணை பத்திர காலம் முடியும் வரை, சிறையில் தான் இருக்க வேண்டும்' என்றார்.
