ADDED : ஜூன் 21, 2025 12:36 AM

கோவை : புனித பிரான்சிஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவர் மன்றத் தலைவர் தேர்தல் நடைபெற்றது.
2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் மன்றத் தலைவரையும், துணைத் தலைவரையும் தேர்ந்தெடுக்கும் விதமாக, இத்தேர்தல் நடைபெற்றது.
மாணவர்களிடையே தலைமைப் பண்பும், பொறுப்புணர்வும் வளரும் வகையில், இத்தேர்தல் நடத்தப்பட்டதாக, பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. 900க்கு மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வாக்குப்பதிவிற்காக பள்ளியில் இரண்டு தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்தல் பற்றிஆசிரியர் கூறுகையில், 'மாணவர்கள் தான் நாளைய தலைவர்கள். அவர்களுக்குத் தேவைப்படும் தலைமைத்திறன், பொறுப்புணர்வு, தனிநபர் முடிவெடுக்கும் திறன் ஆகியவை சிறுவயதிலிருந்தே வளர வேண்டும்.
அதை உணர்த்தும் ஒரு முயற்சியாக, இந்த தேர்தலை நடத்துகிறோம். இதன் வாயிலாக தன்னம்பிக்கையும், மற்றவர்களை வழிநடத்தும் திறனும், சமூகப் பொறுப்பும் வளர, மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது'' என்றார்.