/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்; கண்காணிப்பு அலுவலர் நியமனம்
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்; கண்காணிப்பு அலுவலர் நியமனம்
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்; கண்காணிப்பு அலுவலர் நியமனம்
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்; கண்காணிப்பு அலுவலர் நியமனம்
ADDED : நவ 21, 2024 11:24 PM
கோவை; கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் பணிகளை கண்காணிக்க, தொகுதிக்கு ஒருவர் வீதம், சப்-கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம், அக்., 29ல் துவங்கியது; நவ., 28 வரை நடைபெற உள்ளது. கடந்த, 16 மற்றும், 17ம் தேதிகளில், 1,039 இடங்களில், 3,117 ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாம்கள் மற்றும் ஆன்லைன் முறையில், 42 ஆயிரத்து, 958 படிவங்கள் பெறப்பட்டன.
கடந்த லோக்சபா தேர்தலில், 40 சதவீதத்துக்கு குறைவாக, 40-50 சதவீதத்துக்கு இடைப்பட்ட விகிதத்தில் ஓட்டுகள் பதிவான, 78 ஓட்டுச்சாவடிகள் அமைந்த பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
வரும், 23 (சனிக்கிழமை), 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்தல், ஆதார் எண் இணைத்தல் உள்ளிட்ட சேவைகளுக்கு படிவம் வழங்கலாம். இப்பணிகளை கண்காணிக்க, சட்டசபை தொகுதிக்கு ஒருவர் வீதம், சப்-கலெக்டர் அந்தஸ்தில், 10 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.