ADDED : அக் 16, 2025 08:52 PM
கோவை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், தமிழக அரசு அறிவித்த 'மின்சார ஆட்டோ' கடன் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
கோவையில் மத்தியக் கூட்டுறவு வங்கி, நில வளர்ச்சி வங்கி ஆகிய அமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர் ராமலிங்க செட்டியார். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 116வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு, இவரது திருவுருவ சிலைக்கு, வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின், வங்கியின் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் மேம்பாட்டுக்காக, தமிழக அரசு அறிவித்த 'மின்சார ஆட்டோ' கடன் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
வங்கியின் வாயிலாக கடன் தொகை ரூ.3 லட்சத்தை 36 மாத தவணைகளில் 10 சதவீத வட்டியில் வழங்கப்படும்; இக்கடனை அதிகளவில் பெற்று மகளிர் பயனடைய வேண்டும் என, வங்கியின் மேலாண் இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.