ADDED : மே 25, 2011 01:28 AM
கோவை : எட்டு வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து கற்பழிக்க முயற்சித்த
எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார்.
ரத்தினபுரியை சேர்ந்தவர்
கிருஷ்ணமூர்த்தி; மாலை நேரத்தில் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தி வந்தார்.
இவரது மனைவி சிந்துபைரவி(24). வியாபாரத்தில் கணவருக்கு உதவி வந்தார்.
இந்த நேரத்தில் இவர்களது வாய்பேச முடியாத பெண் குழந்தை, பக்கத்து வீட்டு
குழந்தைகளுடன் விளையாடும். இட்லி விற்பனைக்கு இடையில் சிந்துபைரவி மகளுக்கு
உணவு கொண்டு வந்து கொடுத்துச் செல்வார். வழக்கம்போல, நேற்று முன்தினம்
மாலை, கடைக்கு சென்று திரும்பினார். வீட்டில் சிறுமி இல்லாததால், பக்கத்து
வீடுகளில் தேடினார். அங்கும் இல்லாததால் சந்தேகத்துடன், கேரளாவைச் சேர்ந்த
எலக்ட்ரீசியன் சந்தோஷ்குமாரின் வீட்டுக்கதவை திறந்தார். உள்ளே ஏதும் அறியாத
ஊமைப் பெண்ணிடம் சில்மிஷம் செய்து கொண்டிருந்ததை பார்த்த சிந்து பைரவி,
அதிர்ந்து சத்தமிட்டார். சத்தத்தை கேட்டு, பக்கத்து வீடுகளைச் சேர்ந்த ஆண்,
பெண்கள் கூடி, சந்தோஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். ஊமைப் பெண்ணை மீட்டு
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கோவை மத்திய பகுதி மகளிர் போலீசார்
சம்பவம் பற்றி விசாரித்து, சந்தோஷ்குமாரை கற்பழிக்க முயற்சி, பெண்
வன்முறைச் சட்டப் பிரிவுகளில் கைது செய்தனர். சந்தோஷ்குமாரின் மகளுக்கு
சிலநாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. மகளுடன் மனைவி மற்றும்
குழந்தைகளை கேரளா அனுப்பி விட்டு, இவர் மட்டுமே வீட்டில் தனியாக இருந்து
வந்துள்ளார். கைது செய்யப்பட்ட எலக்ட்ரீசியன் சந்தோஷ்குமார், விசாரணைக்குப்
பின் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
