ADDED : பிப் 10, 2025 11:06 PM
அ நிறம் | அளவு
கோவை; சீரநாயக்கன்பாளையம் மற்றும் ஒண்டிப்புதுார் மின் வாரிய அலுவலகங்களில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
சீரநாயக்கன்பாளையம் மின் வாரிய அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (வடக்கு) விஜயகவுரி பங்கேற்கிறார்.
ஒண்டிப்புதுார் மின் வாரிய அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (மாநகர்) சதீஷ்குமார் பங்கேற்கிறார்.
இந்த மின் வாரிய அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர், கூட்டத்தில் பங்கேற்று தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை நேரில் தெரிவித்து பயனடையலாம்.
இத்தகவலை, செயற்பொறியாளர்கள் தமிழ்செல்வன் (சீரநாயக்கன்பாளையம்), பழனிசாமி (ஒண்டிப்புதுார்) தெரிவித்துள்ளனர்.
