/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்வாரிய பணி நிறைவு பொறியாளர்கள் சந்திப்பு
/
மின்வாரிய பணி நிறைவு பொறியாளர்கள் சந்திப்பு
ADDED : டிச 22, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், தமிழ்நாடு மின்வாரிய பணி நிறைவு பொறியாளர் அமைப்பினர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்கள் அமைப்பு, உடுமலையைச்சேர்ந்த பணி நிறைவு பொறியாளர்கள் சந்திப்பு, ஓய்வூதியர் தின விழா கூட்டம், பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் உள்ள தனியார் ேஹாட்டலில் நடந்தது.
தலைவர் பெரியசாமி, செயலாளர் காமாட்சிசுந்தரம், பொருளாளர் ராஜகோபால், ஆலோசகர் மவுனகுருசாமி, உறுப்பினர்கள் பொன்னுசாமி, ரபீக் அகமது பேசினர். முதுமையில் வரும் உடல் நலக்குறைபாடுகள் பற்றியும், அதற்கான மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் பேசினர். பணி காலம் மற்றும் நட்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

