/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடைகளை மூன்று மாதம் அடைக்க வேண்டுகோள்
/
கடைகளை மூன்று மாதம் அடைக்க வேண்டுகோள்
ADDED : டிச 22, 2025 05:16 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட், ௮ கோடி ரூபாய் செலவில் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. பஸ்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லாமல், பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
டவுன் பஸ்கள் நிற்கும் இடத்தில், 15 கடைகளும், ஒரு ஹோட்டலும், நகராட்சி கட்டண கழிப்பிடமும் உள்ளன. அந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகளை துவக்க உள்ளது. இது தொடர்பாக, ஹோட்டல் மற்றும் கடை வியாபாரிகள் ஆலோசனை கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் அமுதா தலைமையில் நடந்தது.
இதில், தற்போது டவுன் பஸ்கள் நிற்கும் இடத்தில், புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகள், ஜனவரியில் துவங்க உள்ளது. அதனால் கடைகளை மூன்று மாதங்களுக்கு அடைக்கும்படி கமிஷனர், வியாபாரிகளிடம் கூறினார்.
கடை வியாபாரிகள் கூறுகையில், 'தற்போது ஒரு கழிப்பிடம் மட்டுமே உள்ளது. அந்த கழிப்பிடத்தையும் இடித்து விட்டால், கழிப்பிடம் இல்லாமல் பயணிகள் அவதிப்படுவர்.
எனவே தற்போது உள்ள டவுன் பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தை, இடிக்க முடிவு செய்துள்ள நகராட்சி நிர்வாகம், தக்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்' என்றனர்.

