தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குறைகளை தெரிவிக்க மின் வாரியம் அழைப்பு

குறைகளை தெரிவிக்க மின் வாரியம் அழைப்பு

குறைகளை தெரிவிக்க மின் வாரியம் அழைப்பு


ADDED : ஆக 04, 2025 08:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2025 08:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; கோவை நகரியம், கு.வடமதுரை மற்றும் குனியமுத்துார் மின் வாரிய அலுவலகங்களில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (ஆக., 6ம் தேதி) நடக்கிறது.

நகரியம் மின் வாரிய அலுவலகத்தில் காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (மாநகர்) சதீஷ்குமார் பங்கேற்கிறார். கு.வடமதுரை மின் வாரிய அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (கோவை, வடக்கு) விஜயகவுரி பங்கேற்கிறார்.

குனியமுத்துார் மின் வாரிய அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (கோவை, தெற்கு) சுப்ரமணியன் பங்கேற்கிறார். இந்த மின் வாரிய அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர், கூட்டத்தில் பங்கேற்று தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை நேரில் தெரிவித்து பயனடையலாம்.

இத்தகவலை, செயற்பொறியாளர்கள் பசுபதீஸ்வரன் (மாநகர்), சண்முகசுந்தரம் (கு.வடமதுரை) மற்றும் குனியமுத்துார் செயற்பொறியாளர் (பொறுப்பு) சென்ராம் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us