ADDED : மார் 03, 2026 06:15 AM

அ நிறம் | அளவு
கோவை மார்ச் 3 -: தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது.போராட்டத்துக்கு இன்ஜினியர் அசோசியேஷன் மண்டல செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
சி.ஐ.டி.யூ. கோவை மண்டல செயலாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு பவர் இன்ஜினியர் அமைப்பு, அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு பொறியாளர் யூனியன்,பொறியாளர் சங்கம் உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
