/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் கணக்கீடு பணி மின்வாரியம் அறிவிப்பு
/
மின் கணக்கீடு பணி மின்வாரியம் அறிவிப்பு
ADDED : அக் 16, 2025 11:06 PM
பொள்ளாச்சி: கோவை மின் பகிர்மான வட்டம், நெகமம் கோட்டத்தில் ஆ.சங்கம்பாளையம் பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. அதில், கோபாலபுரம் பகிர்மானத்தில், 1,422 மின் இணைப்புகள், ஆ.சங்கம்பாளையம் பகிர்மானத்தில், 1,690 மின் இணைப்புகள், ஆச்சிபட்டியில் 1,197 மின் இணைப்புகள், கொங்கநாட்டன்புதுாரில் 620 மின் இணைப்புகள் உள்ளன.
நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் பயன்பாட்டு அளவு கணக்கீடு செய்யப்படவில்லை. எனவே, இந்த பகிர்மானத்தில் உள்ள மின் நுகர்வோர், ஆக., மாதத்தில் செலுத்திய மின் கட்டணத்தையே இம்மாதமும் செலுத்தலாம்.
டிச., மாதம் கணக்கீடு செய்த பின், அக்., மாதத்தில் செலுத்திய தொகையை ஈடுகட்டி மீதமுள்ள தொகை வசூலிக்கப்படும். இத்தகவலை, நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.