/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் இணைப்புகள் கணியூருக்கு மாற்றம்
/
மின் இணைப்புகள் கணியூருக்கு மாற்றம்
ADDED : ஆக 11, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி; மின் பகிர்மான சோமனூர் கோட்ட செயற்பொறியாளர் மருதாசலம் அறிக்கை:
சோமனூர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட, தட்டாம்புதூர் பகிர்மானத்தில் உள்ள தட்டாம்புதூர், லட்சுமி நகர், யுரேகா நகர், கொள்ளங்காடு, பொதிகை ரெசிடென்சி, செங்காடு, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தும், கடந்த ஆக.1 முதல் கணியூர் பிரிவு அலுவலகத்துக்கு நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளன. மின் நுகர்வோர், கணியூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம்.