/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் சிக்கனம்; தேவை இக்கணம்! விழிப்புணர்வு பேரணியில் அறிவுரை
/
மின் சிக்கனம்; தேவை இக்கணம்! விழிப்புணர்வு பேரணியில் அறிவுரை
மின் சிக்கனம்; தேவை இக்கணம்! விழிப்புணர்வு பேரணியில் அறிவுரை
மின் சிக்கனம்; தேவை இக்கணம்! விழிப்புணர்வு பேரணியில் அறிவுரை
ADDED : ஜன 06, 2025 01:39 AM

சோமனுார்; 'ஐ.எஸ்.ஐ., முத்திரை மற்றும் நட்சத்திர குறியீடு பெற்ற மின் சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும்' என, கருமத்தம்பட்டியில் நடந்த மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
கோவை தெற்கு மின் பகிர்மான வட்டம், சோமனுார் கோட்டம் சார்பில், தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி கருமத்தம்பட்டியில் நடந்தது.
கோவை தெற்கு மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியம், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மனோகரன் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.
சோமனூர் கோட்ட செயற்பொறியாளர் சபரிராஜன், உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள் பங்கேற்றனர்.
'தேவையானபோது மட்டும் மின்சாரத்தை பயன்படுத்துங்கள். எல்.இ.டி., பல்புகள், எல்.இ.டி., 'டிவி'யை பயன்படுத்துங்கள். ஐ.எஸ்.ஐ., முத்திரை மற்றும் நட்சத்திர குறியீடு கொண்ட மின் சாதன பொருட்களை பயன்படுத்தினால், மின்சாரம் சேமிக்கப்படும்.
ஆளில்லாத இடங்களில், மின் விசிறி, மின் விளக்குகள் எரிவதை தவிர்க்கவும். குளிர்சாதன பெட்டியில் பருவ நிலைக்கு ஏற்ப வெப்பமானியை தேர்வு செய்ய வேண்டும்.
ஏ.சி., மற்றும் குளிர்சாதன பெட்டிக்கு, மூன்று பின் உள்ள பிளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். 'ஒவ்வொரு வீட்டுக்கும் எர்த் பைப் அவசியம் அமைக்க வேண்டும்.
இடி, மின்னலின்போது, 'டிவி', மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்கள், பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு வழங்கப்பட்டன.
கருமத்தம்பட்டியில் இருந்து சோமனுார் மின் வாரிய அலுவலகம் வரை பேரணி நடந்தது. கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.