ADDED : ஜன 02, 2025 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், மேட்டுப்பாளையத்தில் நேற்று மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மேட்டுப்பாளையம் மின்வாரிய அலுவலக  செயற்பொறியாளர் சத்யா தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர்கள் சுரேஷ்குமார், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரணியில் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், மின்வாரிய அலுவலக பணியாளர்கள் என, 200க்கும்  மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில்,    மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து, உதவி செயற்பொறியாளர் தரணிபதி, உதவி பொறியாளர்கள் தினேஷ், கணேசன், மகாலிங்கம் ஆகியோர் பேசினர்.

