/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுதேர்வு மையங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம்
/
பொதுதேர்வு மையங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம்
ADDED : பிப் 17, 2025 10:34 PM
கோவை; பொதுத்தேர்வு துவங்கியுள்ள நிலையில், தேர்வு மையங்கள் அனைத்திலும் தடையில்லா மின்சாரம் வினியோகம் இருக்க வேண்டும் என, அனைத்து பிரிவு செயற்பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மாநில பாடத்திட்டத்தின் கீழ், பொதுத்தேர்வுகள் விரைவில் துவங்கவுள்ளன. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், கடந்த 15ம் தேதி முதல், பொதுத்தேர்வுகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகர மேற்பார்வை பொறியாளர் சதிஸ்குமார் கூறுகையில், ''தேர்வுகள் துவங்கியுள்ள சூழலில், தேர்வு மையங்களுக்கு மின்சாரம், தடையின்றி வினியோகம் இருக்கும். தவிர, தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இரவில் படிக்கும் வகையில், 24 மணி நேரமும் மின் வினியோகம் இருக்க, மின்வாரியத்தின் கீழ் அனைத்து பிரிவு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர பராமரிப்பு காரணங்களுக்காக, மின்தடை செய்யவேண்டும் என்றாலும், உயர் அதிகாரிகளின் அனுமதி பெறவேண்டியது அவசியம்,'' என்றார்.

