ADDED : பிப் 08, 2024 09:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலையில், மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
உடுமலையில், மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், கேங்மேன் தொழிலாளர்கள் பிரச்னைகள் மற்றும் உடுமலை மின் வட்ட நிர்வாக அலுவலரின் தொழிலாளர் விரோத போக்கினையும் கண்டித்தும், சி.ஐ.டி.யு.,மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் ஜெகானந்தா, கோவிந்தன், பாலசுப்ரமணியன், ஓய்வுபெற்றோர் நல அமைப்பு தலைவர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும், வரும், 16ம் தேதி, மத்திய தொழிற்சங்கங்களின் பொது வேலை நிறுத்த அறிவிப்பு குறித்து விளக்கப்பட்டது.

