ADDED : பிப் 04, 2026 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோமனூர்: கேங் மேன் பணியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து, மின் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி.ஐ.டி.யு., மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில், அரசூர், சோமனூர் மின் வாரிய அதிகாரிகளின், கேங்மேன் பணியாளுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து, சோமனூர் பவர் ஹவுஸ் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50 க்கும் மேற்பட்ட கேங்மேன்கள் பங்கேற்றனர். பணியாளர் விரோத நடவடிக்கையை கைவிட கோரி, கோஷங்களை எழுப்பினர். சங்க நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.

