/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி துவங்கியது
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி துவங்கியது
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி துவங்கியது
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி துவங்கியது
ADDED : டிச 12, 2025 05:13 AM

கோவை: இந்திய தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்திலுள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை பரிசோதிக்கும் பணி நேற்று துவங்கியது.
கோவை தெற்கு தாலுகா அலுவலக கிடங்கிற்கு கலெக்டர் பவன்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தேர்தல்பிரிவு தாசில்தார் தணிகைவேல் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் நேற்று காலை நேரில் சென்றனர். அங்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கிற்கு சென்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளை துவக்கி வைத்தனர்.
இதில், தி.மு.க., அ.தி.மு.க., கம்யூ., ஆம் ஆத்மி, காங்., பா.ஜ., பகுஜன் சாமாஜ், தே.மு.தி.க., ஆகிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கோவையில் இருப்பு வைக்கப்பட்ட, 8,391 ஓட்டு ப்பதிவு கருவிகள், 5,245 கட்டுப்பாட்டு கருவிகள், 5,885 வாக்குச்சீட்டு சரிபார்க்கும் கருவிகள் என மொத்தம் 19,521 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்படஉள்ளன. முதல் நிலை சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிட்., நிறுவனத்தை சார்ந்த, 13 மென் பொறியாளர்கள் இந்தியத் தேர்தல் கமிஷனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முதற் கட்ட பரிசோதனைப் பணிகள் துவங்கியது. இப்பரிசோதனை பணி தொடர்ந்து ஒரு மாத காலத்துக்கு நடைபெறும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தடையின்றி பார்வையிட ஏதுவாக பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
முதல் நிலை சரிபார்ப்பு பணி அன்றாடம் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். இதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் எந்தநேரமும் பார்வையிடலாம்.

