/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்டேட்டில் யானைகள் முகாம்: தொழிலாளர்கள் அச்சத்தில் தவிப்பு
/
எஸ்டேட்டில் யானைகள் முகாம்: தொழிலாளர்கள் அச்சத்தில் தவிப்பு
எஸ்டேட்டில் யானைகள் முகாம்: தொழிலாளர்கள் அச்சத்தில் தவிப்பு
எஸ்டேட்டில் யானைகள் முகாம்: தொழிலாளர்கள் அச்சத்தில் தவிப்பு
ADDED : அக் 29, 2025 11:46 PM

வால்பாறை: வால்பாறையில், பகல் நேரத்தில் தேயிலை எஸ்டேட்டில் யானைகள் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்க முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும், யானைகள் அதிகளவில் உள்ளன. பருவமழை காலங்களில் கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறைக்கு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
இந்நிலையில், வால்பாறையில் யானைகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு கிடைப்பதால் அவை இங்கேயே நிரந்தரமாக முகாமிட்டுள்ளன. சமீப காலமாக, பகல் நேரத்தில் தேயிலை காட்டில் யானைகள் முகாமிடுவதால் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இதனிடையே, எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் கூட்டமாக முகாமிட்டுள்ள யானைகளை, சுற்றுலாபயணியர் ஆர்வத்துடன் ரசிக்கின்றனர்.
இரவு நேரத்தில், தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் வரும் யானைகள், ரேஷன் கடை, மளிகை கடை மற்றும் குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்துகின்றன. பகலில் எஸ்டேட்டிலும், இரவில் குடியிருப்பிலும் யானைகள் முகாமிடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வனத்துறையினர் கூறியதாவது: யானைகள் முகாமிட்டுள்ள தேயிலை எஸ்டேட்டில், தேயிலை பறிக்க தொழிலாளர்களை எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதிக்க கூடாது. யானையை தொலைவில் இருந்த படியே சுற்றுலாபயணியர் கண்டு ரசிக்கலாம். அருகில் சென்று புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது.
மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வனத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் யானைகளை பாதுகாக்க, வனத்துறையுடன், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

