/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்கம்பத்தை இழுத்த யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
/
மின்கம்பத்தை இழுத்த யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
மின்கம்பத்தை இழுத்த யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
மின்கம்பத்தை இழுத்த யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
ADDED : அக் 24, 2025 03:26 AM

தொண்டாமுத்தூர்: கோவையில், அதிகாலை விளைநிலத்தில் உணவு தேடி வந்த யானை, மின்கம்பத்தை இழுத்து தள்ளியதில், மின்ஒயர் பட்டு, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
கோவை மாவட்டம், போளுவாம்பட்டி, குப்பேபாளையத்தை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை, 30 வயது ஆண் யானை ஒன்று, விளைநிலங்களில் உணவு தேடி வந்தது.
அதிகாலை, 5:00 மணிக்கு, ராமன் குட்டை அருகில் நாகராஜ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து, தக்காளியை உண்டு அங்கிருந்து வெளியேறியது. பின் அங்கு விவசாய வழிதடத்தில், 24 அடி உயர மின்கம்பத்தை, தும்பிக்கையால் பிடித்து இழுத்ததில், மின்கம்பம் உடைந்து விழுந்தது. எதிர்பாராத விதமாக, மின்கம்பி யானையின் உடலில் உரசி அதன் மீது மின்சாரம் பாய்ந்ததில், யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
பிரேத பரிசோதனைக்கு பின், யானை உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.