/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு ரோட்டில் யானைகள் கவனமாக செல்ல அறிவுரை
/
ஆழியாறு ரோட்டில் யானைகள் கவனமாக செல்ல அறிவுரை
ADDED : மார் 18, 2026 09:49 PM

வால்பாறை: வால்பாறை - ஆழியாறு ரோட்டில் யானைகள் நடமாடுவதால், வாகன ஓட்டுநர்கள் கவனமாக செல்ல வேண்டும் என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், ஆழியாறு வழியாக வால்பாறை மலைப்பாதைக்கு வரும் வழியில், பகல் நேரத்திலேயே ரோட்டோரத்தில் யானைகள் முகாமிடுகின்றன. இதனால் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆழியாறு - வால்பாறை மலைப்பாதையில், தனித்தனி கூட்டமாக யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் ஆழியாறு அணைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியிலும், சில நேரங்களில் ரோட்டிலும் யானைகள் முகாமிடுகின்றன.
எனவே, ஆழியாறு வழியாக வால்பாறை செல்லும் சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை மிகுந்த கவனமாக இயக்க வேண்டும். மலைப்பாதையில் நடமாடும் வனவிலங்குகளுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது,' என்றனர்.

