/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணை முதல்வரின் தேதிக்காக யானைகள் காத்திருப்பு! முகாம் ஏற்பாடுகள் முடிந்தன
/
துணை முதல்வரின் தேதிக்காக யானைகள் காத்திருப்பு! முகாம் ஏற்பாடுகள் முடிந்தன
துணை முதல்வரின் தேதிக்காக யானைகள் காத்திருப்பு! முகாம் ஏற்பாடுகள் முடிந்தன
துணை முதல்வரின் தேதிக்காக யானைகள் காத்திருப்பு! முகாம் ஏற்பாடுகள் முடிந்தன
UPDATED : ஜூலை 26, 2025 07:40 AM
ADDED : ஜூலை 25, 2025 09:20 PM

தொண்டாமுத்தூர்: சாடிவயலில் புதியதாக கட்டப்பட்டுள்ள யானைகள் முகாம் பணிகள் முடிவடைந்தும், திறப்புவிழா நடத்தப்படாமல் உள்ளது.விசாரணையில், துணை முதல்வரின் தேதிக்காக காத்திருப்பது தெரியவந்துள்ளது.
கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட, போளுவாம்பட்டி வனச்சரகம், சாடிவயலில், 8 கோடி ரூபாய் செலவில், புதிய யானைகள் முகாம் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
கடந்தாண்டு, ஏப்ரல் மாதம், சாடிவயலில், 50 ஏக்கர் பரப்பளவில், யானைகள் முகாம் பணிகள் துவங்கின. இதில், யானைகளுக்கு ஷெட்- 18, குட்டைகள் -3, கரோல் -2, போர்வெல், மாவுத் மற்றும் காவடிகளுக்கான விடுதிகள், சமையலறை, யானைகள் குளிக்க சவர், தண்ணீர் தொட்டி, யானைகள் மேய்ச்சலுக்கான பயிர் வளர்ப்பு, வாட்ச் டவர், கால்நடை மருந்தகம், முகாமை சுற்றிலும் யானைகள் அகழி, மின் வேலி உள்ளிட்டவை அமைக்கப்பட்டது.
அனைத்து பணிகளும் கடந்த, 4 மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதத்தில், புதிய யானைகள் முகாமை ஆய்வு செய்த வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ, விரைவில் யானைகள் முகாம் திறக்கப்படும் என தெரிவித்தார். ஆனால், இன்னும் திறப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது.
வனத்துறையினர் சிலர் கூறுகையில்,புதிய யானைகள் முகாமில், அனைத்து முக்கிய பணிகளும் நிறைவடைந்தன. அரசிற்கும் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், யானைகள் முகாம் திறக்கப்பட்டதும், யானைகளை எங்கிருந்து கொண்டு வருவது, கும்கி யானைகள் கொண்டு வரப்படுமா என்பது, இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
அதோடு, துணை முதல்வர் வாயிலாக, திறப்பு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இன்னும், துணை முதல்வரின் வருகையும், தேதியும் உறுதியாகாமல் உள்ளது' என்றனர்.
போளுவாம்பட்டி வனச்சரகர் ஜெயச்சந்தி ரன் கூறுகையில், ''சாடிவயல் யானை கள் முகாமில், 97 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.
திறப்பு விழா விரைவில் நடத்தப்படும். திருச்சி, எம்.ஆர்.பாளையத்தில் இருந்து யானைகள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.
துணை முதல்வருக்காக காத்திருக்க வேண்டியதுதான். அதற்காக, நான்கு மாதங்கள் காத்திருப்பது கொஞ்சம் ஓவர்தான்!

