/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிரப்பள்ளி சாலையில் பஸ்சை மறித்த யானைகள்
/
அதிரப்பள்ளி சாலையில் பஸ்சை மறித்த யானைகள்
ADDED : செப் 03, 2025 11:07 PM

வால்பாறை; வால்பாறையில் இருந்து, கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி செல்லும் வழித்தடத்தில், அதிரப்பள்ளி அருகே ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பகல் நேரத்தில் உணவு மற்றும் தண்ணீரை தேடி யானைகள் ரோட்டை கடக்கின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வால்பாறை அடுத்துள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதியிலிருந்து, சாலக்குடிக்கு கேரள அரசு பஸ் இயக்கப்பட்டது.
அதிரப்பள்ளி அடுத்துள்ள வெற்றிலைப்பாறை அருகே பஸ் சென்ற போது, கூட்டமாக வந்த யானைகள் பஸ்சை வழிமறித்தன. சுதாகரித்துக்கொண்ட பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். சிறிது நேரம் யானைகள் அங்கும் இங்குமாக ஆவேசமாக நடந்தன.
கூட்டத்தில் இருந்த ஒரு யானை பஸ்சின் கண்ணாடி அருகே ஆக்ரோஷமாக வந்து, முன்பகுதியில் உள்ள பம்பரை சேதப்படுத்தியது. இதனையடுத்து, டிரைவர் பஸ்சை 'ஸ்டார்ட்' செய்ததும் யானைகள் வழிவிட்டு ஒதுங்கி வழிவிட்டன. டிரைவரின் சமயோஜித நடவடிக்கையால், பஸ்சில் இருந்த 11 பயணியர் எவ்வித பாதிப்புமின்றி தப்பினர்.
இந்த தகவல் அறிந்ததும், அதிரப்பள்ளி ரோட்டில் வெற்றிலைபாறை பகுதியில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. யானைகள் வனத்தினுள் திரும்பியதை உறுதி செய்த பின், போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.