/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடியோ எடுத்தவர்களை விரட்டியடித்த யானைகள்
/
வீடியோ எடுத்தவர்களை விரட்டியடித்த யானைகள்
ADDED : ஜூன் 04, 2025 12:57 AM

வால்பாறை:கேரள மாநிலம், கொடுங்கலுாரை சேர்ந்த இரு சுற்றுலா பயணியர், சாலக்குடி வழியாக வால்பாறைக்கு பைக்கில் வந்தனர். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே, ஆனைக்காயம் என்ற இடத்தில், யானைகள் கூட்டமாக வருவதை ஆர்வக்கோளாறில் வீடியோ எடுத்தனர். ஆவேசமடைந்த யானைகள் அவர்களை விரட்டின.
இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்த, அதிரப்பள்ளி வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிய பின், பைக்கில் வந்த சுற்றுலா பயணியரை எச்சரித்து அனுப்பினர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் யானைகள் அதிகளவில் நடமாடுகின்றன. யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.