/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகளால் தொடரும் தொல்லை; கும்கி யானைகளால் பலன் இல்லை
/
யானைகளால் தொடரும் தொல்லை; கும்கி யானைகளால் பலன் இல்லை
யானைகளால் தொடரும் தொல்லை; கும்கி யானைகளால் பலன் இல்லை
யானைகளால் தொடரும் தொல்லை; கும்கி யானைகளால் பலன் இல்லை
ADDED : பிப் 19, 2025 10:11 PM

பெ.நா.பாளையம் ; சின்னதடாகம் வட்டாரத்தில் வேட்டையன் யானையை கட்டுப்படுத்த, கும்கி யானைகளை கொண்டு வந்து நிறுத்தியும் பலன் இல்லை.
கோவை வடக்கு புறநகர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக வேட்டையன் என்ற ஒற்றை யானையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
வேட்டையன் யானை பெரியநாயக்கன்பாளையம், தாளியூரில் தலா ஒரு நபரை தாக்கிக் கொன்றது. வீடுகளுக்குள் புகுந்து அரிசி, பருப்பு, மாவு, காய்கறி, உப்பு ஆகியவற்றை தின்றும், வீசி எறிந்தும் சேதப்படுத்தியது.
சின்னதடாகம் வட்டாரத்தில் நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வேளாண் நிலங்களுக்குள் புகுந்து, தென்னங்கன்றுகளை சேதப்படுத்தி வருகிறது. வேட்டையன் யானை யை கட்டுப்படுத்த முத்து, சுயம்பு என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. சில நாட்களே இருந்த இந்த கும்கி யானைகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவை ஆனைமலைக்கு திருப்பி அனுப்பப்பட்டன. தற்போது இப்பகுதியில் ஏற்கனவே இருந்த சின்னத்தம்பி யானை, கும்கியாக மாற்றப்பட்ட நிலையில், தற்போது வரப்பாளையம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், வேட்டையன் யானையின் போக்கில் எவ்விதத்திலும் மாற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து வேளாண் பயிருக்கு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து, சின்னதடாகம் வட்டார விவசாயிகள் கூறுகையில்,' பொதுமக்களுக்கு, வேளாண் பயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் காட்டு யானைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என விதி இருந்தும், வனத்துறையினர் வேட்டையன் யானையை இடமாற்றம் செய்யாமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே வேட்டையன் யானையால் இரு மனித உயிர்கள் பலியாகி உள்ளன.
ஏராளமான பயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. மேலும், மனித உயிர் பலியாகாமல் தடுக்கவும், வேளாண் பயிர்களை காக்கவும், வேட்டையன் யானையை இடமாற்றம் செய்ய அரசு உரிய நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.