/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் வேனை சேதப்படுத்திய யானைகள்
/
வால்பாறையில் வேனை சேதப்படுத்திய யானைகள்
ADDED : செப் 28, 2025 11:27 PM

வால்பாறை; வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணியர், தமிழக கேரள எல்லையில் மளுக்கப்பாறை வழியாக சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் பட்டாம்பியை சேர்ந்த சுற்றுலாபயணியர், நேற்று முன் தினம் சாலக்குடியிலிருந்து மளுக்கப்பாறைக்கு தங்களது வாகனத்தில் சென்றனர்.
அப்போது ஆனைக்காயம் என்ற இடத்தில் வாகனம் பழுதானதால், சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு, வேறு வாகனத்தில் மளுக்கப்பாறைக்கு சென்று அங்குள்ள ரிசார்ட்டில் தங்கினர்.
இந்நிலையில் நேற்று காலை சம்பவ இடத்தில் நின்றிருந்த வாகனத்தை பழுது பார்க்க மெக்கானிக்குடன் சென்ற போது, வேனை காட்டு யானைகளை அடித்து நொறுக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து, சுற்றுலாபயணியர், அதிரப்பள்ளி வனத்துறையினர், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அவர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.