/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியினர் வீட்டை சேதப்படுத்திய யானைகள்
/
பழங்குடியினர் வீட்டை சேதப்படுத்திய யானைகள்
ADDED : அக் 03, 2024 11:56 PM

வால்பாறை : வால்பாறை, மளுக்கப்பாறை அருகே பழங்குடியினர் வீட்டை, காட்டுயானைகள் சேதப்படுத்தின.
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது வால்பாறை. கேரள மாநிலம் மளுக்கப்பாறை அடுத்துள்ளது மந்தனங்குடி பழங்குடியின குடியிருப்பு. இப்பகுதிக்கு, நேற்று முன்தினம் இரவு, கூட்டமாக வந்த யானைகள், பாலன் என்பவரது வீட்டை இடித்து சேதப்படுத்தியது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்தன.
உடல் நிலை பாதித்திருந்த மனைவி ராஜம்மாளின் சிகிச்சைக்காக வெற்றிலைப்பாறை மருத்துவமனைக்கு பாலன் சென்றதால், இந்த சம்பவத்தில் கணவன், மனைவி இருவரும் யானையிடம் இருந்து தப்பினர். சம்பவம் குறித்து, மளுக்கப்பாறை வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.