/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருந்தகத்தை இடித்த யானைகள்; போராடி விரட்டிய வனத்துறையினர்
/
மருந்தகத்தை இடித்த யானைகள்; போராடி விரட்டிய வனத்துறையினர்
மருந்தகத்தை இடித்த யானைகள்; போராடி விரட்டிய வனத்துறையினர்
மருந்தகத்தை இடித்த யானைகள்; போராடி விரட்டிய வனத்துறையினர்
ADDED : ஆக 13, 2025 08:30 PM

வால்பாறை; வால்பாறை, வாகமலை எஸ்டேட் பகுதியில் நள்ளிரவில் கூட்டமாக வந்த யானைகள் மருந்தகத்தை இடித்து சேதப்படுத்தின.
வால்பாறையில் பருவமழைக்கு பின், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் யானைகள் முகாமிட்டுள்ளன.
நல்லமுடி காட்சி முனைப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், சுற்றுலாபயணியர் இங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், முடீஸ் அடுத்துள்ள வாகமலை எஸ்டேட் பகுதிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு கூட்டமாக வந்த யானைகள், மருந்தகம், மஸ்டர் அறையை இடித்து சேதப்படுத்தின.
இதில், மருந்தகத்தில் இருந்த மருந்து, மாத்திரைகள், மஸ்டரில் இருந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பைல்கள் சேதமடைந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். ஒரே நேரத்தில் பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டு, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்துவதை தடுக்க முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர்.

