/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேயிலை எஸ்டேட்டில் யானைகள்; சுற்றுலா பயணியர் கண்டு ரசிப்பு
/
தேயிலை எஸ்டேட்டில் யானைகள்; சுற்றுலா பயணியர் கண்டு ரசிப்பு
தேயிலை எஸ்டேட்டில் யானைகள்; சுற்றுலா பயணியர் கண்டு ரசிப்பு
தேயிலை எஸ்டேட்டில் யானைகள்; சுற்றுலா பயணியர் கண்டு ரசிப்பு
ADDED : ஜன 22, 2025 08:11 PM

வால்பாறை; வால்பாறை, தேயிலை எஸ்டேட்டில் பகல் நேரத்தில் முகாமிட்ட யானைகளை சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.
வால்பாறையில் பருவமழைக்கு பின், வனவளம் செழிப்பாக மாறியதால், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு மற்றும் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன.
புதுத்தோட்டம், மாணிக்கா, சின்கோனா, கருமலை, கவர்க்கல், உருளிக்கல், முடீஸ் முத்துமுடி, நல்லமுடி, பன்னிமேடு, வில்லோனி உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
பகல் நேரத்தில், யானைகள் தேயிலை காட்டில் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், சோலையாறுடேம் செல்லும் ரோட்டில் மாணிக்கா எஸ்டேட்டில் நேற்று காலை, இரண்டு யானைகள் முகாமிட்டன. அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணியர் யானைகளை கண்டு ரசித்தனர்.
இதனிடையே, யானைகள் முகாமிட்டுள்ள பகுதிக்கு வனத்துறையினர் நேரில் சென்று கண்காணித்தனர். பகல் நேரத்தில் தேயிலை காட்டில் யானைகள் முகாமிட்டதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியில் வழக்கத்தை விட யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். யானைகள் நடமாடும் பகுதியில் தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகம் அனுமதிக்கூடாது,' என்றனர்.