/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்டேட் அலுவலகத்தை சூறையாடிய யானைகள்
/
எஸ்டேட் அலுவலகத்தை சூறையாடிய யானைகள்
ADDED : மார் 18, 2025 10:27 PM

வால்பாறை, ; வால்பாறை அருகே, தமிழக எல்லையில் எஸ்டேட் அலுவலகத்தை சூறையாடிய யானைகளை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர்.
தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ளது வால்பாறை. சோலையாறுடேம் வழியாக கேரள மாநிலம், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் ரோட்டில் மளுக்கப்பாறை எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
இரவு நேரத்தில் கூட்டமாக வரும் யானைகள், வீடு மற்றும் கடைகளை இடித்து சேதப்படுத்தி வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் மளுக்கப்பாறை எஸ்டேட் அலுவலகத்தை யானைகள் இடித்து சேதப்படுத்தின.
நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தின் போது, மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் யானைகளை விரட்ட முடியாமல் அலைமோதினர். மளுக்கப்பாறை எஸ்டேட்டில் முகாமிட்டுள்ள யானைகளை, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.