/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடி மையத்தை சூறையாடிய யானைகள்
/
அங்கன்வாடி மையத்தை சூறையாடிய யானைகள்
ADDED : செப் 23, 2024 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை : வால்பாறை அருகே, கேரள மாநிலம், மளுக்கப்பாறை அடுத்துள்ளது மயிலாடும்பாறை டீ எஸ்டேட். இங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு, ஐந்து யானைகள் வந்தன. அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்து சேதப்படுத்தி, பொருட்களை சூறையாடின. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மளுக்கப்பாறை வனத்துறை அதிகாரிகள், அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டனர்.
யானைகள் தொடர்ந்து இதே எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளதால், தொழிலாளர்கள் இரவு நேரங்களில் துாங்க முடியாமலும், பகல் நேரத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமலும் தவிக்கின்றனர்.

