/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பலா பழத்தை ருசித்த யானைகள்; வீட்டு வாசலில் ஓய்வெத்த கரடி: வால்பாறையில் மக்கள் திக்திக்
/
பலா பழத்தை ருசித்த யானைகள்; வீட்டு வாசலில் ஓய்வெத்த கரடி: வால்பாறையில் மக்கள் திக்திக்
பலா பழத்தை ருசித்த யானைகள்; வீட்டு வாசலில் ஓய்வெத்த கரடி: வால்பாறையில் மக்கள் திக்திக்
பலா பழத்தை ருசித்த யானைகள்; வீட்டு வாசலில் ஓய்வெத்த கரடி: வால்பாறையில் மக்கள் திக்திக்
ADDED : ஜூலை 31, 2025 09:49 PM
வால்பாறை; வால்பாறையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் பின்பக்கம் இருந்த மரத்தில், பலா பழத்தை பிடிங்கி யானைகள் ருசித்துக்கொண்டிருந்தன. வீட்டு வாசலில் கரடி ஓய்வெடுத்ததால் தொழிலாளர்கள் வெளியில் செல்ல முடியாமல் பரிதவித்தனர்.
வால்பாறை அடுத்துள்ளது கெஜமுடி எஸ்டேட் மேல்பிரட்டு. இங்குள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு குட்டியுடன் வந்த யானை, வீட்டின் பின்பக்கம் தோட்டத்தில் இருந்த மரத்தில் பலா பழத்தையும், கொய்யா பழத்தையும் ருசித்து உட்கொண்டன.
அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து ஓ ய்வு பெற்ற தங்கராஜ் என்பவரின் வீட்டின் பின்பக்கம் பலா பழத்துக்காக யானைகள் குடும்பத்துடன் முகாமிட்டிருந்தன. இதனால், யானைகள் நீண்ட நேரம் நகராமல் அங்கேயே இருந்தன.
அப்போது, அந்த பகுதிக்கு வந்த கரடி, யானைகளை கண்டவுடன் வீரம்மாள் என்ற தொழிலாளியின் வீட்டு வாசலில் நீண்ட நேரம் படுத்திருந்தது. இதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் வீட்டை திறக்கவும் முடியாமல், யானை, கரடியை விரட்டவும் முடியாமல் பரிதவித்தனர்.
நள்ளிரவு, 2:00 மணி வரை குடியிருப்பு பகுதியிலேயே யானை, கரடி முகாமிட்டதால், தொழிலாளர்கள் விடிய, விடிய துாக்கமிழந்து, உயிர் பயத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.
அதன்பின், அதிகாலை, 4:00 மணிக்கு கெஜமுடி எஸ்டேட் கீழ்பிரட்டிற்கு யானைகள் இடம் பெயர்ந்ததால், தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர்.
வனத்துறையினர் கூறியதாவது:
பருவமழைக்கு பின், கேரள வனத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த யானைகள், வால்பாறை எஸ்டேட் பகுதியில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் யானைக்கு பிடித்தமான வாழை, பலா, கொய்யா போன்றவைகளை பயிரிடப்படுவதை, தவிர்க்க வேண்டும்.
அனைத்து எஸ்டேட் நிர்வாகத்திற்கும் பல முறை நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் கண்டு கொள்ளாததால், யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் முகாமிடுகின்றன. யானைகள் நடமாட்டத்தை, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு, கூறினர்.