/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் பொருட்களை ருசி பார்த்த யானைகள்
/
ரேஷன் பொருட்களை ருசி பார்த்த யானைகள்
ADDED : ஆக 12, 2025 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர், ; கோவை, கோவைபுதூர் அடுத்த அறிவொளி நகர் அருகேயுள்ள அண்ணா நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ரேஷன் கடை செயல்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த ஒரு குட்டி உள்பட ஐந்து யானைகள் கூட்டம், கடையின் ஷட்டரை உடைத்து, உள்ளேயிருந்த அரிசி, பருப்பு, சர்க்கரையை ருசி பார்த்து சென்றுள்ளன.
காலையில் அங்கு வசிப்போர், இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடை ஊழியர் வந்து பார்த்தபோது ஆறு மூட்டைகளிலிருந்த பொருட்களை உட்கொண்டது தெரிந்தது.

