/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகருக்குள் 'விசிட்' செய்த யானைகள்; விரட்ட முடியாமல் தவித்த மக்கள்
/
நகருக்குள் 'விசிட்' செய்த யானைகள்; விரட்ட முடியாமல் தவித்த மக்கள்
நகருக்குள் 'விசிட்' செய்த யானைகள்; விரட்ட முடியாமல் தவித்த மக்கள்
நகருக்குள் 'விசிட்' செய்த யானைகள்; விரட்ட முடியாமல் தவித்த மக்கள்
ADDED : அக் 12, 2025 10:31 PM
வால்பாறை; தமிழக - கேரள எல்லையில் உள்ள வால்பாறைக்கு யானைகள் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளன. வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ள யானைகள், பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் உலா வருகின்றன.
இந்நிலையில் எஸ்டேட் பகுதியில் மட்டுமே உலா வந்த யானைகள் கூட்டம், தற்போது மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரிலும் வரத்துவங்கியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு, நகரை ஒட்டியுள்ள சவராங்காடு எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட இரண்டு யானைகள், குடியிருப்பு பகுதி அருகே முகாமிட்டது.
இதனால் பீதியடைந்த சிறுவர்பூங்கா, கக்கன்காலனி மக்கள் ஒன்றாக இணைந்து, யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் விரட்டினர். இருப்பினும் நள்ளிரவில் மீண்டும் யானைகள் நகரில் உள்ள குடியிருப்பிற்கு வந்துவிடுமோ என்ற பீதியில் இருந்தனர். பொதுமக்கள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் கூட யானைகள் நடமாடுகின்றன. ஆனால் சுற்றுலாபயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில் யானைகள் வருவதில்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக சவராங்காடு, புதுத்தோட்டம் பகுதிகளில் முகாமிடும் யானைகள், இரவு நேரத்தில் வாழையை ருசிக்க குடியிருப்பு பகுதியில் முகாமிடுகிறது. யானைகள் நடமாட்டத்தை முன் கூட்டியே கண்காணித்து, நகருக்குள் வராதவாறு, வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்' என்றனர்.