/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயம், வீட்டு உபயோக பம்ப் சந்தையில் எல்லன் பம்ப்ஸ் முன்னணி
/
விவசாயம், வீட்டு உபயோக பம்ப் சந்தையில் எல்லன் பம்ப்ஸ் முன்னணி
விவசாயம், வீட்டு உபயோக பம்ப் சந்தையில் எல்லன் பம்ப்ஸ் முன்னணி
விவசாயம், வீட்டு உபயோக பம்ப் சந்தையில் எல்லன் பம்ப்ஸ் முன்னணி
ADDED : செப் 30, 2025 10:39 PM

இ ந்தியாவின் விவசாயம் மற்றும் வீட்டு உபயோக பம்ப் துறையில் முன்னணியில் உள்ள எல்லன் பம்ப்ஸ் நிறுவனம், 1960 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நுகர்வோரை ஈர்க்கும் வகையில் சிறந்த தயாரிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
குறைந்த மின் அழுத்தத்திலும் அதிக நீரை எடுக்கும் திறன் கொண்டவை எல்லன் பம்புகள். தரம் மற்றும் புதுமைகளில் அதிக கவனம் செலுத்தி உற்பத்தி செய்வதால் எல்லன் பம்புகள் நீண்ட நாட்கள் உழைக்கிறது.
பம்புகள் மற்றும் மோட்டார்கள் மட்டுமின்றி இரும்பு வார்ப்புகள், அலுமினிய வார்ப்புகள்,மற்றும் ஸ்டேம்பிங்ஸ் சொந்த உபயோகத்திற்கும் விற்பனைக்காவும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிறுவனம் ஐ.எஸ்.ஐ.,மற்றும் ஐ.எஸ்.ஒ., 9001 தரநிலைகளை பெற்றுள்ளது. எல்லன் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் அனைத்தும் கடுமையான சோதனைகள், உற்பத்தியின் போது நிலையான சோதனைகள், நீண்டகால சோதனைகள் மற்றும் ஆன்-சைட் சோதனைகள் முடிந்த பிறகே விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மோட்டார்கள் மற்றும் பம்ப் செட்கள் விற்பனை செய்து வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்று திகழ்கிறது.
தொழில் நகரங்கள் முதல் கிராமங்களில் உள்ள விவசாயிகள் வரை அனைத்து தரப்பினருடனும் எல்லன் நிறுவனம் தனது நடைமுறை ஆலோசனைகளையும் ஆன்-சைட் உதவியையும் வழங்கி வருகிறது. இதனை சாத்தியமாக்க ஒவ்வொரு மாநிலங்களின் முக்கிய பகுதிகளில் சேவை மையங்களை நிறுவியுள்ளது.
மேலும் எல்லன் நிறுவன தயாரிப்புகள் அதிக ஆற்றல் திறன் மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த பம்புகளை தயாரித்து அதிக ஸ்டார் ரேட்டிங்களை பெற்றுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பல்வேறு மாநில வாரியங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சப்ளையர்களின் பட்டியலில் எல்லன் நிறுவனம் தேர்வாகி தனது அங்கீகாரத்தை திறம்பட செய்து வருகிறது.
சமீப வருடங்களில், வீட்டு உபயோகம் மற்றும் விவசாய துறைக்கு அதிக செயல்திறன் மிக்க பம்புகளை அறிமுகப்படுத்தி எல்லன் பம்புகள் சந்தையில் மேலும் ஒரு முன்னோடியாக திகழ்கிறது.
இந்த பம்புகள் அதிக செயல்திறன், குறைந்த விலை மற்றும் சுற்றுசூழலுக்கு உகந்ததாகவும் வாடிக்கையாளருக்கு ஏற்றதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தியுள்ள மஹாசக்தி பம்புகள், செயல்திறன், நீடித்த உழைப்பு மற்றும் விலையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
மஹா சக்தி பம்புகளின் தரம் மற்றும் மிகச்சிறந்த செயலாற்றலால் எல்லன் பம்புகள் நாட்டின் சிறந்த தேர்வாக உள்ளது. எல்லன் டிவாட்டரிங் பம்புகள் கட்டுமானம், விவசாய நிலம் மற்றும் மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து தண்ணீரை வெகுவிரைவில் வெளியேற்றவும் மற்றும் கடினமான சூழ்நிலைகளை கையாளவும்சிறப்பான வடிவமைப்பினை கொண்டுள்ளது.
ஐ.எஸ்.ஒ., 9001 தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனமான எல்லன் தயாரிப்புக்கள் ஐ எஸ் ஐ முத்திரையுடன் உள்ளது. இதுவே இவர்களின் உயர்ந்த தரத்திற்று சான்றாகும்.
மேலும் எல்லன் தயாரிப்புகள் எரிசக்தி திறன் பணியகத்திலிருந்து சிறந்த மதிப்பீடுகளையும் பெற்றுள்ளது.
பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது. தொடர்ந்து தனது புதுமையான தீர்வுகளாலும் தரத்திற்கான அர்ப்பணிப்பாலும் திறமையாக செயல்பட்டு வருகிறது. வீட்டு தேவை மற்றும் விவசாய தேவைக்கு எல்லன் பம்ப்புகளை வாங்கி பயனடையுங்கள்.