/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'எதிர்கால உலக ஜவுளி துறையில் ஓ.இ., மில்கள் பெரும் பங்கு வகிக்கும்'
/
'எதிர்கால உலக ஜவுளி துறையில் ஓ.இ., மில்கள் பெரும் பங்கு வகிக்கும்'
'எதிர்கால உலக ஜவுளி துறையில் ஓ.இ., மில்கள் பெரும் பங்கு வகிக்கும்'
'எதிர்கால உலக ஜவுளி துறையில் ஓ.இ., மில்கள் பெரும் பங்கு வகிக்கும்'
ADDED : செப் 30, 2025 10:39 PM

ஓ பன் எண்ட் ஸ்பிண்ணிங் இயந்திரம், 1963 ஆம் ஆண்டு செக் குடியரசு நாட்டில் உலகிற்கு அறிமுகபடுத்தப்பட்டது. 1980 ஆம் ஆண்டு வரை செக் குடியரசு, போலந்து, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு ஓஇ மெஷின்கள் நிறுவப்பட்டு நுால் தயாரித்து வந்தனர்.
இந்தியாவில் 1982 ஆம் ஆண்டு ராஜபாளையம் மில்லில், ரீட்டர் ஒஇ எஸ்.பி.ஜி., மெசின் நிறுவப்பட்டு ஒ.இ., நுால் உற்பத்தி தொடங்கப்பட்டது. அதற்கு பின் ஓஇ மில்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 40 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 15 லட்சம் ரோட்டார்கள் என்ற எண்னிக்கையை அடைந்துள்ளது.
ஓபன் எண்ட் ஸ்பிண்ணிங் மில்ஸ் அசோசியேசன் தலைவர் அருள்மொழி கூறியதாவது:
தமிழ் நாட்டில் மட்டும் ஒ.இ., மில் நுால் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 45 லட்சம் கிலோ உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ் நாட்டின் மற்ற பகுதிகள் மற்றும் பானிபட், பஞ்சாப், அகமதாபாத், ஆந்திரா போன்ற மாநிலங்களில் 35 லட்சம் கிலோ நுால் நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒ.இ., மில்கள் ஸ்பின்னிங் மில்களில் இருந்து வெளிவரும் கழிவு பஞ்சு, கார்மெண்ட் கம்பெனிகளில் இருந்து வரும் பனியன் கட்டிங் வேஸ்ட், பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பெட் பாட்டில் பாலிஸ்டர் பைபர் போன்றவற்றை மூலப் பொருளாக பயன்படுத்தி நுால் உற்பத்தி செய்து இந்த மண்ணை மாசுபடாமல் காக்கிறது. இத்தகைய ஒ.இ., மில்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் சலுகைகள் வழங்கி இந்த தொழிலை ஊக்குவிக்க வேண்டும்.
இன்று உலக அளவில் மறுசுழற்சி வகைகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளதால் ஒ.இ., மில் நுால்கள், ஏற்றுமதி ஜவுளி பொருட்கள் உற்பத்தியிலும் பங்கு வகிக்கிறது. ஏழை மக்கள் பயன்பாட்டில் உள்ள ஜவுளி பொருட்கள் ஜமக்காளம், மெத்தை விரிப்பு, துண்டு வகைகள், லுங்கி, நைட்டி, பாவாடை துணிகள் ஜீன்ஸ் துணி, டி சர்ட், தரை துடைப்பான்கள், சமையல் அறை விரிப்புகள் ஒ.இ., மில் நுால்களில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. உலக ஜவுளி துறையின் பயன்பாட்டில் வரும் காலங்களில் ஒ.இ., மில்கள் மிகப் பெரிய பங்கு அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.