/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனை வளாக பாதைகளுக்கு 'அவசர சிகிச்சை'
/
அரசு மருத்துவமனை வளாக பாதைகளுக்கு 'அவசர சிகிச்சை'
ADDED : ஏப் 21, 2025 10:16 PM

கோவை, ; 'தினமலர்' செய்தி எதிரொலியாக, கோவை அரசு மருத்துவமனை வளாக பாதைகள் செப்பனிடும் பணிகள் துவங்கப்பட்டன.
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பாதைகள் சேதமடைந்துள்ளதால், சிகிச்சை வரும் நோயாளிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன.
நோயாளிகளை சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சரில் அங்குமிங்கும் அழைத்துச் செல்வதிலும், அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்வதிலும், தாமதம் ஏற்படுகிறது.
ரூ.9.65 கோடி மதிப்பில், ரோடு, சாக்கடை பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டும் ரோடு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இழுத்தடிப்பதாக, புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்த செய்தி, நமது நாளிதழில் 'மருத்துவமனை வளாகம் முழுவதும் கரடுமுரடு' எனும் தலைப்பில், நேற்று முன்தினம் வெளியானது.
இந்நிலையில், நேற்று மருத்துவமனை வளாகத்தில், கான்கிரீட் கலவை கொட்டி, பள்ளங்கள் சரிசெய்யப்பட்டன. நோயாளிகளின் நலனுக்காக, நிரந்தரமாக பாதையை சரிசெய்ய, மருத்துவமனை நிர்வாகம் முன்வர வேண்டும்.