தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இ.ம.க., நிர்வாகிகள் கைது

இ.ம.க., நிர்வாகிகள் கைது

இ.ம.க., நிர்வாகிகள் கைது


UPDATED : அக் 11, 2026 12:08 AM

ADDED : அக் 11, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 12:08 AM ADDED : அக் 11, 2026 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ராகுல் தமிழக வருகைக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பில், அறிவிக்கப்பட்ட கருப்புக்கொடி போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தமிழக போலீசார் அனுமதி மறுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தடையை மீறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கட்சி நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியிருப்பதாவது:

ராகுல் வருகைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த முயலும் இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி மறுப்பதும், நிர்வாகிகளைக் கைது செய்வதும், கொடிகளைப் பறிமுதல் செய்வதும், போராட்டத்தைக் கைவிடுமாறு நிர்பந்திப்பதும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us